Sunday, January 25, 2009

ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!

இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.

5 comments:

Vidya Jayaraman said...
This comment has been removed by the author.
Unknown said...

Remember reading his early serialized stories in Anandha vikatan that challenged conventional thinking in gender issues and middle class beliefs. Fitting honor for a creative trend setter!

வழிப்போக்கன் said...

ஒரு கலைஞர் இன்னொரு கலைஞரைப் பாராட்டுவதும் அவருக்குக் கிடைத்த விருதுக்காக மகிழ்வதும் மிகவும் இனிப்பான செய்தி. அதுவும் மனவெளி கடந்த பாராட்டாக இருப்பது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிவதுபோல. ஜெயகாந்தன் தமிழுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தமிழர்களின் சொத்து. பத்மபூஷண் பெருமை பெறுகிறது.
எஸ். கிருஷ்ணமூர்த்தி

Unknown said...

ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். இருந்தும், ஞானபீட விருதைப்போலவே இதுவும் அவருக்குத்தாமதமாகவே கிடைத்திருக்கிறது.
சாருநிவேதிதா தன் பதிவொன்றில் (கேள்வி பதில் (26/1)கூறியிருப்பது போல, விருதுகளை வெகுதாமதமாகக் கொடுப்பதும், அறிவுஜீவிகளைப்பற்றி அறியாதிருப்பதும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது. நாம் பெற்ற பாக்கியம் நமதரசும், நம் சமூக, அரசியல் சூழ்நிலைகளும்!
-விஜய்
ஹவானா(கூபா)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எந்த விருது ஜெயகாந்தனுக்குக் கொடுத்தாலும், அந்த விருது தான் அவரால் க்வுரவப் படுத்தப் படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை!!