Monday, February 2, 2009

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழிசையைப் பற்றி எழுதுகிறார்.

http://jeyamohan.in/?p=1416#

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!

12 comments:

Simulation said...

ஜெமோவின் கட்டுரையின் சுட்டி கொடுத்தற்கு நன்றி.

தமிழிசை குறித்த எனது இந்த இடுகையை, சமயம் இருக்கும் போது பாருங்கள்.

http://simulationpadaippugal.blogspot.com/2006/12/blog-post.html

- சிமுலேஷன்

S. said...

ஜேமோவின் பதிவைப் பற்றி எழுதியது வரவேற்கத்தக்க ஒன்று. அவர் தமிழுக்குக் கிடைத்த மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் என்பது பலருக்குத் தெரியாதது நமது அவப்பேறே! அவரைப் புரிந்துகொள்ளுபவர்களைவிட புரிந்துகொள்ள மறுக்கும் அதிதீவிரவாதிகளை என்ன சொல்லுவது? கர்நாடக இசைபற்றித் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.
சு. கிருஷ்ணமூர்த்தி

jeyamohan said...

மதிப்புக்குரிய சஞ்சய்,

என்னுடைய பிரியத்திற்குரிய பாடகரான நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பது பெருமை. மகிழ்ச்சி. ஒரு ரசிகனின் வணக்கங்கள்.

யுவன் சந்திரசேகர் என் நண்பன். அவன் உங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான். அவன் வீட்டுக்கு நீங்கள் சென்றதை புல்லரித்துச் சொன்னது நினைவில் இருக்கிரது. இசையில் நீங்கள் நம் காலத்து நாயகன்.
ஜெ

ஞாபகம் வருதே... said...

சஞ்சய் தி.ஜா வின் நாவல்களிலும், சிறுகதைகளிலும் ராகங்களைப் பற்றிய தொட்டுச் செல்லல் இருக்கும்.அதிலும் தமிழிசை பற்றிய விஸ்தாரமான பதிவுகள் இருக்காது.இதை எழுத தமிழில் தற்போது ஆள் இல்லை என்பதே உண்மை.ஜெ.மோ.வின் இத்தகய பதிவுகள் போன்றவைகள் அடையாளம் காட்டப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும்.நல்ல முயற்சி.

aravind said...

சஞ்சய் சார்,

சுருக்கமாக ஆனால் சிறப்பாக ‘நச்’ என்று இருக்கிறது உங்கள் பிளாக். உங்களது இலக்கிய ஆர்வமும், ரசனையும் வியக்க வைக்கிறது. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் புதுமைப்பித்தனையும், நா.பாவையும் வாசித்துப் பாருங்கள்!

ஜெயமோகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி. நம் காலத்தில் வாழும் மிகச் சிறந்த இலக்கியவாதிகளுள் ஒருவர். அவரது ’தமிழிசை’ கட்டுரை மிக ஆழமானதும் முக்கியமான ஒன்றுமாகும்.

உங்களது இலக்கிய/இசைப் பகிர்தல்கள் தொடரட்டும்.

suresh said...

Dear Sanjay,

Through jeyamohan blog i reached your blog. Interesting. Your interest in reading books in Tamil that too selected good writers is much appreciable. you can write notes on music also in tamil in your blog

suresh, new delhi

Bala said...

அன்புள்ள திரு.சஞ்சய்,

வணக்கம். நீங்கள் தமிழில் எழுதுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜெயமோகன் வலைப்பூ மூலமாக அறிந்தேன். சங்கீதம் அறிந்து கொள்ளும் முயற்சிகளில் இருக்கிறேன். உங்களிடம் இன்னும் வரவில்லை. விரைவில் வருகிறேன்.

அன்புடன்

பாலா

ஞாபகம் வருதே... said...

//புதுமைப்பித்தனையும், நா.பாவையும் //
:):)

Erode Nagaraj... said...

ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ஷாஜி என்று எழுத்தில் ஆளுமை உள்ளவர்கள் சங்கீத இரசிகர்களாகவும் இருப்பதால், தத்தம் மனோ நிலை, இசை உள்ளிறங்கிச் சென்று ஏற்படுத்தும் உணர்வு, சராசரி இசை இரசிகன் தவற விட்ட நிகழ்வுகள் போன்ற பல விஷயங்கள் பொருத்தமான வார்த்தைகளில் வெளி வருவது இன்பமே.

இசை சார்ந்தவர்க்கு வாசிப்பில் ஈடுபாடு இருப்பது அவரை மேலும் கவியுணர்வுள்ளவராய் ஆக்கும் என்பது என் அனுபவம்.

எப்படி இருக்கிறீர்கள் சஞ்சய்? எப்போதுமே, உங்களை வந்து
பார்க்க வேண்டும் என்று எண்ணியவாறே, எங்கேனும்
வலைத் தளத்தில் ஹாய் சொல்லும்,

ஈரோடு நாகராஜன்.

Erode Nagaraj... said...
This comment has been removed by the author.
Erode Nagaraj... said...

புத்தாண்டு வாழ்த்துகள் :)

Skanda said...

Sanjay,

I have run into your blog pretty late. I read a detailed interview of your's in Kalachuvadu, and I was pleasantly surprised with what you had tell. Through this Thamizh blog, I have reached Jeyamohan and I am so glad I did.

Thanks,

Skanda Narayanan

P.S. Thamizhil ezhutha enathu browser tharpodhu anumadikkavillai. Viraivil ayathapaduthikolgirein. :-)