Thursday, May 13, 2010

இப்படியும் ஒரு போலீஸ்கார்!

என் நண்பர் ஒருவர் நேற்று லஸ் கார்னர் சிக்னலில் திரும்பும்போது போலீஸ்கார் நிறுத்தினார்.
 "கொஞ்சம் நிறுத்துங்க! சிக்னல் ரெட் தெரியலே?"
"இல்லே சார் கிரீன் தானே!"
"அங்க எஸ் ஐ இருக்காரு போய் பாருங்க."
நண்பர் எஸ் ஐய பார்த்தார்.
"நூறு ரூபா கட்டுங்க. சிக்னல்ல தப்பா வந்தீங்க."
எதுக்கு வம்புன்னுட்டு நூறு ரூபாய கட்டிட்டு வண்டியில ஏறினார்.
 முதல்ல நிறுத்தின போலீஸ்கார், "சாரி சார்! எஸ் ஐ கூப்ட  சொன்னார். அதான் நிறுத்தினேன். என்ன தப்பா நினைக்காதீங்க. உங்க வண்டிய நிறைய பார்த்திருக்கேன். நீங்க சிக்னல் தப்பவே மாட்டீங்க. தப்பா எடுத்துக்காதீங்க சார்!"

6 comments:

Siva Sankaranarayanan said...

கண் கெட்ட பின்னே சூரிய உதயமான கதையாக இருக்கிறது. இந்த போலீஸ் காரரை பாராட்டுவதா குறை சொல்வதா என தெரியவில்லை!

சுந்தர்ஜி said...

ஓ ஹென்றி கதையில் வரும் ஒரு ட்விஸ்ட் நெஜத்லயுமா?சென்னையின் ஆச்சர்யங்களில் ஒன்று அந்த போலீஸ்காரரின் செயல்.

Shreekanth said...

Atleast police sorryavadhu ketkaraale..Good sign

- யெஸ்.பாலபாரதி said...

:(((

சில கருப்பு ஆடுகளால் பல காக்கிகளுக்கு அவமானம்.

Several tips said...

மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் ப்ளாக்

Mark Antony said...

நல்ல போலீஸ்காரர்