Thursday, January 15, 2009

சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்

ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.

புழுதிக்குள் சில சித்திரங்கள் - தேவி பாரதி

தேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை 'வரலாற்றை அறிதல்' என்ற முறையில் எழுதி இருக்கிறார். குறிப்பாக 1977 Emergency காலத்தில் அவருடைய பள்ளி அனுபவங்களும், 1984 தேர்தலின் பொழுது ஒரு சுவர் ஓவியராக வேலை செய்த அனுபவங்களையும் மிக ரசமாகவும் எளிய நடையில் எழுதி இருக்கிறார். படிப்பதற்கும் ரொம்பவும் சுவையாக இருந்தது. இது போன்ற எழுத்துக்களில் தனி நபர்களின் அனுபவங்கள் எப்படி ஒரு கால கட்டத்தின் வராலாற்றுடன் இணைகிறது என்ற ஒரு அழகான வடிவம் கிடைக்கிறது. ஒரு காலகட்டத்தின் வரலாறு பொதுவாக ஒரு academic பார்வையுடன் தான் எழுதப்படும். ஆனால் எல்லோரும் வரலாறு எழுதலாம் என்ற ஒரு தொனியில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் சேர்க்கும் பொழுது அந்த காலகட்டத்தின் பல அம்சங்கள் நன்றாக விரிவடைகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, MLA அவர்களின் நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் நன்றாகக்க் கையாண்டப்பட்டுள்ளன. பொதுவாக காலச்சுவடு போன்ற சிறு பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது எழுத்தாளர்களுடைய நவீன மொழி எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் படித்த தமிழ் கொஞ்சம் பழமையானது. சுமார் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை சொல்லலாம். ஆனால் தேவி பாரதியின் நடையில் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் இல்லை.

கிருஷ்ணன் நம்பி - சுந்தர ராமசாமி

சாகித்ய அகடெமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நூலைப் படித்தேன். இதே வரிசையில் மௌனி மற்றும் தி ஜானகிராமன் அவர்களைப்பற்றிய நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் இதில் சு ரா அவர்கள் கிருஷ்ணன் நம்பி எழுதிய சிறந்த சில சிறுகதைகளின் கதைத் தொகுப்பை வழங்கி அவருடைய தனிப்பட்ட விமர்சனத்தையும் சேர்த்து இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத் தொகுப்பை உடனே படக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

MV வெங்கட்ராம் அவர்களின் நித்யகன்னி இப்பொழுது தொடங்கி இருக்கிறேன். இதிகாசத்தை கற்பனைக்கேற்ப விரிவு படுத்தும் ஒரு முயற்சி. கிட்ட தட்ட கோபலகிருஷ்ண பாரதி திருநாளைப்போவார் சரித்திரத்தை நந்தனார் சரித்திரமாக செய்ததைப்போல்.

6 comments:

மாலன் said...

நீங்கள் தமிழிலே எழுத வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஒரு நல்ல வாசகரும் கூட என்பதை நானறிவேன். வெகு நாட்களுக்கு முன்பு நாம் மேற்கொண்ட ஒரு உரையாடலில் (இசை உலகம்- சன் நியூஸ்)நீங்கள் தேவன் பற்றிப் பேசியது நினைவிருக்கிறது. கிருஷணன் நம்பி படியுங்கள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

இசை பற்றி எழுதுபவர்கள் தமிழில் குறைவு. நீங்கள் எழுத வேண்டும். உங்கள் கச்சேரிகளில் கிடைக்கிற அனுபவம் அதில் கிடைக்காமல் போகலாம் (சமையல் குறிப்பு எழுதுவதும் சமைப்பதும் ஒன்றல்ல) ஆனாலும் அது பலருக்கு இனிமையாகவே இருக்கும்.

அன்புடன்
மாலன்
maalan@gmail.com

Simulation said...

சஞ்சய்,

உங்களின் இலக்கிய ஆர்வம் வியப்பளிக்கின்றது.

தமிழ் வலையுலகில் விரிந்து படர வாழ்த்துகின்றேன்.

- சிமுலேஷன்

Simulation said...

செட்டிங்ஸில் "கமெண்ட் மாடரேஷன்" என்றதொரு ஆப்ஷன் உள்ளது. அதனை தயவு செய்து எனேபிள் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் அனுமதிக்கும் பின்னூட்டங்கள் மட்டும் வெளியிடப்படும். இல்லையென்றால் உங்கள் கருத்துக்கு ஒவ்வாத பின்னூட்டங்களும் உங்கள் அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்டுவிடும்.

- சிமுலேஷன்

ஜீவி said...

அன்பிற்கினிய சஞ்சய்,
எதேச்சையாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். சந்தோஷம் பிடிபடவில்லை.
தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் நீங்கள் படித்த அவர்களின் சில நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. முக்கியமானது என்னவென்றால், பளீரென்று மின்னல் வெட்டிவிட்டுப் போகிற மாதிரி அந்த நூலில் என்ன விஷயம் அற்புதமாகத் தங்களுக்குத் தோன்றியதோ, அதை
'நீங்களும் தான் படித்துப் பாருங்களேன்' என்று சொல்கிற மாதிரி
ஒரு கீற்று மாதிரி தீட்டிவிட்டுப் போகிறீர்களே, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எம்.வி.வி.யின் 'பொய்த்தேவு' பற்றி, ஜே.கே.யின் ஒ.இ.அ.அ. பற்றி இதை எல்லாம் படிக்கறச்சே,என்ன தெரிஞ்சதோ அதைச் சொன்னது அழகாக இருக்கு. அதுவும், இன்னொரு துறையில் கொடிக்கட்டிப் பறக்கிறவர், இதையெல்லாம் சொல்லும் பொழுது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. புத்தகம் படிக்கறதுங்கறது உங்க சின்ன வயசுலேந்து தொடர்ந்து வர்ற ஆர்வமா இருக்கும்னு நினைக்கறேன்.

எனது கீழ்க்கண்ட பிளாக்லே ஒவ்வொரு எழுத்தாளராக எடுத்துக்
கொண்டு எனக்குத் தெரிஞ்சதை எழுதி
வருகிறேன்.
jeeveesblog.blogspot.com

தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இவற்றைப் படித்துப் பார்த்தால் மகிழ்ச்சி அளிக்குமென்று நினைக்கிறேன்.

மிக்க அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

தவறுக்கு வருந்துகிறேன்.
க.நா.சு.வின் 'பொய்த்தேவு' என்று படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சீனி மோகன் said...

வாழ்த்துகள் சஞ்சய்.