Friday, December 12, 2008

தொடங்கிவிட்டது சீசன்

சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 'சீசன்' என்னும் இசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக பொருளாதார நிலையினால் கச்சேரிகளின் எண்ணிக்கை குறையவில்லை! சபாக்களுக்கு டிக்கெட் வசூலில் குறைவு இல்லை ஆனால் கொஞ்சம் கம்பெனிகளின் ஆதரவில் இறக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

ஐந்து வயசிலிருந்து கச்சேரிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மியூசிக் அகாடெமியில் கச்சேரி கேட்பதுதான் அப்போ பெரிய விஷயம். அம்மா டிக்கெட் வாங்காமல் கேட்க முடியும் இலவச கச்சேரிகளை போய் கேட்கச் சொல்லுவார். 30 வருஷங்களுக்கு முன்பு மதுரை TN செஷகோபலனின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். மத்தியானம் 2 மணி, கூட்டம் நெரிக்கும். ஒரு வருஷம் அவருக்கு அடுத்ததாக வைஜயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி இருந்ததால் மேடையில் lighting அதிகம். சேஷகோபாலன் சாரின் பெர்சொனளிட்டி சற்று தூக்கலாகவே இருந்தது!

ஜெயா டிவியின் மார்கழி உத்சவம் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துகே கொண்டு பாடுவது என்று தீர்மானம். இந்த வருடம் நான் என்டுத்துக் கொண்ட தலைப்பு MM தண்டபாணி தேசிகர். இவர் ஒரு வாக்கேயகாரர் , அதாவது ஒரு பாட்டுக்கு இயல் இசை இரண்டையும் இயற்றியவர். இது போல் நமது இசையின் சிறந்த வாகேயக்காரர்களாக சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்லுவார்கள். இந்த ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு. ஆகையினால் அவர் இயற்றிய சில பாடல்களையும் அவர் இசை அமைத்த வேறு சிலவர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினேன். நல்ல வரவேற்பு. இந்த 'நல்ல வரவேற்பு' என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது எதோ தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது. இதுக்குதான் அப்பப்போ தமிழிலும் எழுத வேண்டும்!

பின் குறிப்பு: எல்லா சபாக்களிலும் டிபினுக்கு கான்டீன் வசதி உண்டு. கவனிக்க வேண்டிய ஒரு கான்டீன் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் தமிழ் இசை சங்கத்தின் கான்டீன். இன்னும் அங்கே தோசை 3 ரூபாய்க்கு கிடைக்குதாம்! அதுவும் ருசியான வெத்தலை தோசை!

7 comments:

Prakash said...

வரவேற்கிறேன்.

சீசன் முடியறவ வரைக்கும், தொடர்ந்து எழுதுங்க சஞ்சய்....

இலவசக்கொத்தனார் said...

நிறையா பேரு கேட்டுட்டாங்க. நானும் கேட்கறேன். அது என்ன வெத்தலை தோசை.

அப்புறம் முதலில் இரக்கம் என எழுதி இருப்பது இறக்கம் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியானால் மாற்றி விடுங்கள் இல்லை அனர்த்தம் ஆகிறது.

Sanjay said...

வெத்தலையை சின்ன துண்டுகளாக நறுக்கி மாவுடன் சேர்த்து தோசையை செய்வது. ரொம்ப ருசி.

Anonymous said...

Hello Sanjay Sir,

I read lots of postings about your concerts at www.aparna-a.com - Aparna's blog and I chanced upon your concert on Jaya TV just now (I work and live in Kuwait)and am recording it right now to watch peacefully.

I liked your jovial and at the same time very humble answer to the question "Bakthi in Music".

Hope to hear more of your voice.

Ravi said...

Dear Sanjay sir,

Happened to watch your concert yesterday (22nd Dec) on Jaya TV "Margazhi Mahotsavam". It was a great show. Looking forward to attending your concert here in Bangalore, Indira Nagar Sangeet Sabha on 26th January.

Just to mention...

I am TS. Seshadri's nephew. Chittappa was elated when I shared with him that you had written about your violin learning in your blog. He also recollected how excited he was happy when he got a chance to accompany you in one of the concerts later.

It must have been a great proud feeling to have your old teacher play accompaniment to you. Wasn't it?

Regards,
Ravi

PS: Sorry, I wish I wrote this in Tamil here, but I am fighting with fonts & stuff. So, just not being able to make this in Tamil here.

bharathi.sundar said...

Sanjay, congrats on all your wonderful performances this season, I heard, Ragasudha hall, Mudhra, Indian Fine arts, Music academy and Krishna Gana sabha, they were all wonderful, Your raaga alapanais were fantastic; Songs that were rendered beautifully were
Amba Neelambari, Vazhi Maraikudu, Thiruvadi Charanam; Jhonpuri RTP and the grand finale with Eppo Varuvaro, gave me goose bumps Thank you for providing this musical feast..
Bharathi, Kalpakkam

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஆஹா.. நானும் கேட்டேன்..சாரி..பார்த்தேன் அந்த நிகழ்ச்சியை..அப்படியே தண்டபாணி தேசிகரை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்!!

நந்தனார் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்!!