Friday, July 25, 2008

கு ப ராவும் சிறுகதைகளும்

எனக்கு சிறுகதைகளில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நாவல், மற்றும் மனித சரித்திரங்கள் ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கு ப ராஜகோபாலன் எழுதிய சிறுகதைகளைப் படித்துக்கொண்டிடுக்கிறேன். இது வரை இந்த மாதிரி கதைகள் தமிழில் படித்ததில்லை. "சிறிது வெளிச்சம்" என்று ஒரு கதை. 60-70 வருடங்களுக்கு முன்பு இப்படியும் எழுதியிருக்க முடியுமா என்று தோண வைக்கிறது. ஆங்கிலத்தில் economy of expression என்று கலையைப்பற்றி சொல்வதுண்டு. அனாவசியமாக கையில் இருப்பதை அள்ளித்தரக்கூடாது. இசையில் கூட இந்த உவமை பொருந்தும். பல வருடங்களுக்கு முன் ஒரு கச்சேரி செய்தவுடன் ஒரு விமர்சகர் சொன்னார் "எல்லாத்தையும் இதே கச்சேரில கொட்டாதே! அடுத்த கச்சேரிக்கு கொஞ்சம் மீதி இருக்கட்டும்!" அந்த மாதிரி கு ப ராவின் கதைகளில் ஒரு அனாவசியம் இல்லாத ஒரு சொல் நடை. கொஞ்சம் சொல்லி நிறைய அனுபவிக்க முடியும் என்று காட்டக்கூடிய தன்மை.

2 comments:

Unknown said...

உங்கள் தமிழார்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி !

நீங்கள் சிவாவிஷ்ணு கோயிலில் பாரதியார் பாடலை கச்சேரியின் தொடக்கத்திலேயே பாடியதற்குத் தான், நான் "உங்களைப் போன்றவர்கள் பாடுவதால் தமிழ்ப்பாட்டின் 'status' கூடுகிறது" என்றேன். சற்று கோபத்துடன் "என்னிக்கும் ஒசத்தியாத்தான் இருந்துண்டிருக்கு. நாங்கதான் அதனால் பயனடைகிறோம்" என்ற அர்த்தத்தில் நீங்கள் பதிலளித்தது உங்கள் தன்னடகத்தையே காட்டுகிறது !

சிவகுமார்

jayakanth said...

Very glad to see that you enjoyed Ku.Pa. Ra's superb short story collections titled "AAtramai" . I am also a regular of the blogs of Jeyamohan. pl. try the blogs of r.p.rajanayahem too.
I have listened to many of your concerts (once live at Kuwait) and all your podcasts. Great going.