சமீபத்தில் படித்தது "வேள்வித் தீ" - எம் வீ வெங்கட்ராம் எழுதிய ஒரு அழகிய நாவல். சில நாட்கள் முன்பு அவருடைய ஒரு சிறுகதை படித்த ஞாபகம். குறிப்பாக அதில் அவர் கையாண்ட பெண் பாத்திரம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் இதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நாவலைப் படித்த பிறகு முதலில் இருக்கும் முன்னுரைகளைப் படிக்கக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன். ஆனால் கடைசியில் இந்த நாவலைப் பத்தி சுந்தர ராமசாமி அவர்களுடன் நடை பெற்ற ஒரு உரையாடலையும் சேர்த்து இருப்பது நன்றாக இருந்தது. எனக்கென்னமோ பொதுவாக முன்னுரைகள் பின்னுரைகளாகவே இருப்பது தேவலை.
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இந்த நாவலில் அவர் கையாண்ட அந்த இரண்டு பெண்களும் தான். இரண்டு கண்ணோட்டங்களை முன்வைத்துப் பார்க்கிறார் ஆசிரயர். முடிவில் பார்த்தல் பாசிடிவ் நெகடிவ் ரெண்டும் இருக்கிறது. ஒரு பக்கம் இயற்கையாகவும் சம்ப்ரதாயமகவும் எடுக்கும் "நெகடிவ்" முடிவு, மறுபக்கம் நவீனமாக எடுக்கும் "பாசிடிவ்" முடிவு. கலைஞன் படைக்க வேண்டும், ஆனால் அனுபவம் தீர்ப்பு ரெண்டுமே ரசிகனுடையது!

No comments:
Post a Comment