மார்கழி மாதத்தில் பெருமாள் கோவில் பொங்கல் ரொம்ப விசேஷம். அதுவும் பட்டர்கள் சுட சுட நம்ப கையில போடறதும் அத நம்ம பிடிக்கறதே ஒரு catch practice. கிரிகெட் விளையாடும்போது கேட்ச் விட்டா பசங்க ஒடனே "டேய் மார்கழி மாசம் கோயிலுக்கு போய் பொங்கல் வாங்கு, அப்பத்தான் பிடிக்க வரும் " ன்னுட்டு கிண்டல் அடிப்பாங்க. சில சமயம் ரெண்டு மூணு கேட்ச் விட்டா "இவனுக்கு நம்ம கோயில் போதாது. இவன பார்த்தசாரதி கோயிலுக்குத்தான் அனுப்பணும்" பாங்க! அன்னிக்கி பாகிஸ்தான் ஆட்டத்தைப் பாத்தீங்களா? இவங்கள காஞ்சிபுரத்துல வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அனுப்ப வேண்டியதுதான்!
Monday, February 28, 2011
Saturday, January 22, 2011
வேள்வித் தீ - எம் வீ வெங்கட்ராம்
சமீபத்தில் படித்தது "வேள்வித் தீ" - எம் வீ வெங்கட்ராம் எழுதிய ஒரு அழகிய நாவல். சில நாட்கள் முன்பு அவருடைய ஒரு சிறுகதை படித்த ஞாபகம். குறிப்பாக அதில் அவர் கையாண்ட பெண் பாத்திரம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் இதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நாவலைப் படித்த பிறகு முதலில் இருக்கும் முன்னுரைகளைப் படிக்கக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன். ஆனால் கடைசியில் இந்த நாவலைப் பத்தி சுந்தர ராமசாமி அவர்களுடன் நடை பெற்ற ஒரு உரையாடலையும் சேர்த்து இருப்பது நன்றாக இருந்தது. எனக்கென்னமோ பொதுவாக முன்னுரைகள் பின்னுரைகளாகவே இருப்பது தேவலை.
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இந்த நாவலில் அவர் கையாண்ட அந்த இரண்டு பெண்களும் தான். இரண்டு கண்ணோட்டங்களை முன்வைத்துப் பார்க்கிறார் ஆசிரயர். முடிவில் பார்த்தல் பாசிடிவ் நெகடிவ் ரெண்டும் இருக்கிறது. ஒரு பக்கம் இயற்கையாகவும் சம்ப்ரதாயமகவும் எடுக்கும் "நெகடிவ்" முடிவு, மறுபக்கம் நவீனமாக எடுக்கும் "பாசிடிவ்" முடிவு. கலைஞன் படைக்க வேண்டும், ஆனால் அனுபவம் தீர்ப்பு ரெண்டுமே ரசிகனுடையது!
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இந்த நாவலில் அவர் கையாண்ட அந்த இரண்டு பெண்களும் தான். இரண்டு கண்ணோட்டங்களை முன்வைத்துப் பார்க்கிறார் ஆசிரயர். முடிவில் பார்த்தல் பாசிடிவ் நெகடிவ் ரெண்டும் இருக்கிறது. ஒரு பக்கம் இயற்கையாகவும் சம்ப்ரதாயமகவும் எடுக்கும் "நெகடிவ்" முடிவு, மறுபக்கம் நவீனமாக எடுக்கும் "பாசிடிவ்" முடிவு. கலைஞன் படைக்க வேண்டும், ஆனால் அனுபவம் தீர்ப்பு ரெண்டுமே ரசிகனுடையது!
Thursday, January 20, 2011
குளோபல் உணர்ச்சி
கர்நாடக இசை ரசிகர்கள் படிக்க வேண்டிய கதை! இந்த கதையைப் படித்தவுடன் ஒரு சுவராஸ்யமான அனுபவம் ஞாபகத்துக்கு வருது - ஏழு வருஷத்துக்கு முன்பு ஸ்பெயினுக்கு போயிருந்தோம். அங்கு காரவக என்ற சிறிய கூக் கிராமம். உள்ளே செல்லும்பொழுது ஒரு காதொலிக் அக்ரஹாரதிர்குள் நுழைவது போன்ற அனுபவம். அங்கே ஒரு சின்ன அரங்கத்தில் கச்சேரி. மைக் டெஸ்ட் செய்து கொண்டிருந்தோம். வயலின் கலைஞர் வரதராஜன் கொஞ்சம் நீலாம்பரி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு ஸ்பானிஷ்காரர் என்னிடம் "இதைக் கேட்டால் ஒரு கனவு காண்பது போல் தோன்றுகிறது" என்றார்! ஆமாய்யா எங்க ஊர்லே தாய்மார்கள் குழந்தையைத் தூங்கவைப்பதற்கான தாலாட்டு ராகம்தான் இது. பரவாயில்லியே நம்ம சங்கீதத்திற்கு ஒரு குளோபல் உணர்ச்சி இருக்குடோய்!
Subscribe to:
Posts (Atom)