Wednesday, August 5, 2009

பாரதி 'யார்' ????

இன்று நண்பர் ஸ்ரீராம் ஒரு கதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு பிரபல டிவி சானலிலிருந்து ஒரு இளம் பெண் நிருபர் போன் செய்து, " சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இரண்டு ப்ராபல்யமான சுதந்திர சம்பந்தப்பட்ட இடங்கள் என்ன இருக்கிறது" என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் மெரினா பீச் அந்த காலத்தில் பல கூட்டங்களுக்காக உபயோகப்பட்டதென்றும், கோகலே ஹால் இன்னொரு முக்கியமான இடம் என்றும் கூறினார். அந்த நிருபருக்கு கோகலே யார் என்று தெரியவில்லையாம்! சரி அது போகட்டும், அவராவது வடக்கத்திக்காரர். அடுத்து ஏதாவது ஒரு சுதந்திர வீரரின் வம்சத்தில் இருக்கும் ஒரு நபர் யாரவது இருந்தால் பேட்டி எடுக்கலாம் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் ராஜ்குமார் பாரதி, சுப்ரமணிய பாரதியின் கொள்ளு பேரன் இருப்பதாகச்சொன்னார். அதற்கு அந்த நிருபர் "சுப்ரமணிய பாரதி யார்?" என்று கேட்டாளாம்! ஸ்ரீராம் எதற்கும் அந்த பெண் எந்த பள்ளியில் படித்தாள் என்று கேட்டதற்கு சென்னையில் இருக்கும் ஒரு 'பாஷ்' பள்ளியின் பெயரைச் சொன்னாளாம். இதைக் கேட்டதும் விவேக் ஒரு படத்தில் பாரதியின் படத்தை காட்டி யாரென்று கேட்டதற்கு ஒரு பய்யன் " கே டி குஞ்சுமோன் " என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது! தமிழ் நாட்டில் கல்வி பயின்று தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!

8 comments:

Ganesh Devarajan said...

Will a Tamizh history TV channel help this situation?

swami said...

Aiyo Akkaramam

Sanjay, adhu endha school endru neengal sollavendum. Ellarukkum adhuvum theriyanum.

Aruna Kalyan said...

I am an ardent fan of Sri. Subramania Bharathi. I am not very versatile in Tamil as I have lived all my life in Bangalore, but I could not resist attempting to read what Sri. Sanjay has written. Appa has always felt sad that neither of his daughters know to read / write Tamil fluently, and doesnt know who will benefit from an excellent Tamil Library he maintains at home. I have been making an effort to read tamil these days just to help me feel at home with my cultural roots which is in Tamil Nadu. I love Kannada and Kannadigas and the life that Bangalore has given us, but nevertheless, no one can deny that deep down I am still a tamilian and love Tamil as much. I think if someone in TN doesnt know who is Bharathi, then they have lost a lifetime of experience. I hope this changes with people bringing in vizhipunarchi amongst tamilians. Thank you for blogging about this incident.

Sampat said...

ஆங்கிலேய அடிமை விடுதலை, பெண்கொடுமை விடுதலை,ஜாதி விடுதலை பேசிய பாரதிக்கே விடுதலை கொடுத்து விட்ட தற்கால பள்ளிக்கல்வி நாகரீகம் அநாகரீகம்.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கருதாமல் அறிவின் அளவுகோலாக கருதும் அவலம் ஆங்கிலேய அடிமைத்தனத்தின் ஒரு அங்கமே.

பாரதி “யார்!” என்று பாரதியின் கம்பீரமான சொல்வீச்சைக் கேட்டு ஆச்சர்யத்துடன் வினவிய மகாத்மா எங்கே? பாரதி “யார்?” என்று கேட்கும் தற்கால அறியாமையின் கொடுமை எங்கே?

மாகவியாய் அவதரித்த மஹானே! பாரதியே! ஆங்கில மோகம் கொண்ட தற்கால பெற்றோர்களாகிய எங்களை மன்னித்து விடு!

Rajesh said...
This comment has been removed by the author.
Rajesh said...

@Ganesh, I would live with people who ask who Bharathi is than a distorted Tamizh history channel spreading malinformation influenced by vested interests!!!

Simulation said...

"பாரதி யார்" உண்மையாகவே தெரியாமல் கேட்டாளா?

அல்லது

"தமில் எல்லாம் என்குத் தெர்யாது" என்று காட்டிக் கொள்வதற்காக விட்ட பீலாவா?

எனக்குத் தெரிந்தவரை இரண்டாவது காரணமே உண்மையாக இருக்குமென்று தோன்றுகின்றது.

லூஸ்லே விடுங்க..

- சிமுலேஷன்

வழிப்போக்கன் said...

இதைவிடக் கொடுமை நான் படித்த கட்டுரை ஒன்று.
பாரதி யார்? என்ற கேள்விக்கு ஒரு “பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக “முனைவர்” சொன்ன பதில்:
”அவன் ஒரு பார்ப்பனக் கவிஞன்”.
இதைவிடக் கொடுமை ஏதாவது உண்டா?