மார்கழி மாதத்தில் பெருமாள் கோவில் பொங்கல் ரொம்ப விசேஷம். அதுவும் பட்டர்கள் சுட சுட நம்ப கையில போடறதும் அத நம்ம பிடிக்கறதே ஒரு catch practice. கிரிகெட் விளையாடும்போது கேட்ச் விட்டா பசங்க ஒடனே "டேய் மார்கழி மாசம் கோயிலுக்கு போய் பொங்கல் வாங்கு, அப்பத்தான் பிடிக்க வரும் " ன்னுட்டு கிண்டல் அடிப்பாங்க. சில சமயம் ரெண்டு மூணு கேட்ச் விட்டா "இவனுக்கு நம்ம கோயில் போதாது. இவன பார்த்தசாரதி கோயிலுக்குத்தான் அனுப்பணும்" பாங்க! அன்னிக்கி பாகிஸ்தான் ஆட்டத்தைப் பாத்தீங்களா? இவங்கள காஞ்சிபுரத்துல வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அனுப்ப வேண்டியதுதான்!
Monday, February 28, 2011
Subscribe to:
Posts (Atom)