Thursday, June 12, 2008
நாமக்கல் கவிஞரின் ஒரு 'முத்து'
'நான் புதுமைக்கென்று எதையும் மாற்றிவிட விரும்பும் புரட்சிக்காரனும் அல்ல; பழமையானது என்பதற்காக மட்டும் எதையும் மாற்றிவிட விரும்பாத வரட்சிக்காரனும் அல்ல' - இந்த வாக்கியத்தைப் படிக்கும்பொழுது எனக்கு என்னுடைய குருநாதர் திரு கல்கத்தா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஞாபகம் வந்தது. அவரும் இப்படி தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கர்நாடக இசைத்துரையுள் புரட்சிக்காரர்களும் வரட்சிக்காரர்களும் நிறைய உண்டு!
Monday, June 9, 2008
நாமக்கல் கவிஞரின் "என் கதை"
இரண்டு நாட்களாக நாமக்கல் கவிஞரின் "என் கதை" படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான புத்தகம். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். இது வரை படித்ததில் குறிப்பாக நாடகத் துறையுடன் அவரது தொடர்பு, மற்றும் கிட்டப்பாவைப் பற்றிய விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கின்றன.
Friday, June 6, 2008
காபி இரண்டாம் டிகாஷன்!
பாபநாசம் சிவன் அவர்களின் சிஷ்யர்கள் மார்கழி மாதத்தில் காலையில் பஜனை நடத்துவது வழக்கம். இது கபாலி கோயிலின் நான்கு வீதிகளில் நடைபெறும். அங்கு குறிப்பாக சிவனின் சீடர் திரு செதலபதி பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக அற்புதமாகப் பாடுவார். காபி ராகம் பாடுவதில் அவர் வல்லவர் என்று சொல்ல வேண்டும். இந்த பஜனைகளில் நானும் அடிக்கடி கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை திரு பாலு அவர்களின் காபி ராக விஸ்தாரம் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஒரு ரசிகர் "காபி இன்றி இரண்டாம் டிகாஷன்!" என்றார்.
பொதுவாக வீட்டில் டிகாஷன் காபி சாப்பிடுபவர்களுக்கு புதிதாக பில்டரிலிருந்து இறக்கிய டிகாஷன் கலந்த காபி தன் மிகவும் ருசியாக இருக்கும். சில சமயங்களில் விருந்தினர் அதிகம் வந்துவிட்டால் டிகாஷனில் கொஞ்சம் தண்ணி கலந்துவிட்டால் நிறைய காபி தயாரிக்கலாம். இருந்தாலும் வழக்கமாக காபி சாப்பிடுபவர்களுக்கு ருசியில் வித்தியாசம் தெரிந்துவிடும். அதைத்தான் இரண்டாம் டிகாஷன் என்று சொல்லுவார்கள்!

Subscribe to:
Posts (Atom)